கிண்ணியாவில் மக்களின் குடியிருப்புக்களுக்குள் நுழையும் காட்டு யானைகளால் மக்களின் பயிர் செய்கை நிலங்களில் பெரும் பொருள் மற்றும் சொத்தழிவுகள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இரவு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் பல தென்னை மரங்களையும், வாழை,முதலான பயிர்களையும் துவம்சம் செய்து உள்ளதோடு, ஒர் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மைகளையும் துவம்சம் செய்துள்ளது.
குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்ட, கிண்ணிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் ,மஜீத் நகர் முதலான பகுதிகளில் நேற்றையதினம்(08)இரவு இடம்பெற்றுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யானை-மனிதன் மோதல்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் இல்லை.
அந்தவகையில், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குளம் பகுதிக்குள் இரவு நுழைந்த காட்டு யானைகள் தென்னை, கத்தரி முதலான பயிர்களையும் வேளாண்மைகளையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, வீடொன்றையும் துவம்சம் செய்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை பல தென்னை மரங்களையும்,வேளாண்மையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கர் வயல் நிலங்களை நாசமாக்கி விட்டது. இந்தப் பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது. இது எங்களுடைய வாழ்வாதாரம் தென்னை, முதலானவற்றையும் அழித்து விடுகின்றன.
ஒவ்வொரு இரவும் வந்து இவ்வாறான நாசத்தை செய்கின்றது. இரவு நேரங்களில் எங்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தால் வெளியில் செல்ல முடியாது. இதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, தென்னை மரம் முதலானவத்தையும் முறித்துள்ளது. இரவு நேரங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். சரியான முடிவு பெற்றுத் தர வேண்டும்.
நாங்கள் பெரும் துன்பத்துக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி எமக்கான தீர்வினை பெற்றுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தீவிரம். கிண்ணியாவில் மக்களின் குடியிருப்புக்களுக்குள் நுழையும் காட்டு யானைகளால் மக்களின் பயிர் செய்கை நிலங்களில் பெரும் பொருள் மற்றும் சொத்தழிவுகள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இரவு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் பல தென்னை மரங்களையும், வாழை,முதலான பயிர்களையும் துவம்சம் செய்து உள்ளதோடு, ஒர் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மைகளையும் துவம்சம் செய்துள்ளது.குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்ட, கிண்ணிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் ,மஜீத் நகர் முதலான பகுதிகளில் நேற்றையதினம்(08)இரவு இடம்பெற்றுள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யானை-மனிதன் மோதல்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் இல்லை.அந்தவகையில், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குளம் பகுதிக்குள் இரவு நுழைந்த காட்டு யானைகள் தென்னை, கத்தரி முதலான பயிர்களையும் வேளாண்மைகளையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை, வீடொன்றையும் துவம்சம் செய்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதேவேளை பல தென்னை மரங்களையும்,வேளாண்மையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.ஒரு ஏக்கர் வயல் நிலங்களை நாசமாக்கி விட்டது. இந்தப் பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது. இது எங்களுடைய வாழ்வாதாரம் தென்னை, முதலானவற்றையும் அழித்து விடுகின்றன.ஒவ்வொரு இரவும் வந்து இவ்வாறான நாசத்தை செய்கின்றது. இரவு நேரங்களில் எங்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தால் வெளியில் செல்ல முடியாது. இதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.அதேவேளை, தென்னை மரம் முதலானவத்தையும் முறித்துள்ளது. இரவு நேரங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். சரியான முடிவு பெற்றுத் தர வேண்டும்.நாங்கள் பெரும் துன்பத்துக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி எமக்கான தீர்வினை பெற்றுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.