கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் இரவு 3 காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகள் புகுந்து வாழ்வாதாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த மரவள்ளி, வாழை என்பனவற்றை முற்றும் முழுதாக அழித்துள்ளன.
யானையை துரத்துவதற்காக முற்பட்டவர்களையும் யானை அச்சுறுத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே நபர் யானையால் தாக்கப்பட்டு வலது கால் செயல் இழந்த நிலையில், தற்பொழுது தனக்கு எந்த ஒரு தொழிலுக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கின்றார்.
தனது மனைவின் உதவியுடன் ஜீவனோயத்துக்காக செய்கை செய்யப்பட்ட மரவள்ளிக் கிழங்கை அவித்து உண்டும், விற்பனை செய்துமே தற்பொழுது தமது வாழ்நாளை கழித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
தான் இந்தியாவிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் நாடு திரும்பிய நிலையில், தற்போது வரையில் எந்த விமோசனமும் கிடைக்கப் பெறவில்லை எனவும், பலமுறை யானைகளினால் அழிவுகள் மட்டுமே ஏற்பட்டுவதாகவும் கவலை வெளியிடுகிறார்.
கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம் - வாழ வழியின்றி தவிக்கும் மக்கள் samugammedia கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர்.குறித்த பகுதியில் நேற்றைய தினம் இரவு 3 காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகள் புகுந்து வாழ்வாதாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த மரவள்ளி, வாழை என்பனவற்றை முற்றும் முழுதாக அழித்துள்ளன. யானையை துரத்துவதற்காக முற்பட்டவர்களையும் யானை அச்சுறுத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர். கடந்த சில மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே நபர் யானையால் தாக்கப்பட்டு வலது கால் செயல் இழந்த நிலையில், தற்பொழுது தனக்கு எந்த ஒரு தொழிலுக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கின்றார்.தனது மனைவின் உதவியுடன் ஜீவனோயத்துக்காக செய்கை செய்யப்பட்ட மரவள்ளிக் கிழங்கை அவித்து உண்டும், விற்பனை செய்துமே தற்பொழுது தமது வாழ்நாளை கழித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.தான் இந்தியாவிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் நாடு திரும்பிய நிலையில், தற்போது வரையில் எந்த விமோசனமும் கிடைக்கப் பெறவில்லை எனவும், பலமுறை யானைகளினால் அழிவுகள் மட்டுமே ஏற்பட்டுவதாகவும் கவலை வெளியிடுகிறார்.