• Jan 26 2025

வீதியோரத்தில் காட்டு யானையின் சடலம் - விசாரணை ஆரம்பம்

Chithra / Jan 17th 2025, 3:35 pm
image



அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில் - விக்டர் ஏத்தம்  பிரதேச   வீதி ஓரத்தில்  காட்டு யானையொன்று இன்று காலை   உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன்  மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும்  பொத்துவில்  பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வீதியோரத்தில் காட்டு யானையின் சடலம் - விசாரணை ஆரம்பம் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில் - விக்டர் ஏத்தம்  பிரதேச   வீதி ஓரத்தில்  காட்டு யானையொன்று இன்று காலை   உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன்  மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும்  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும்  பொத்துவில்  பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement