• Nov 24 2025

அறுவடைக்கு தயாரான பயிர்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்

Aathira / Nov 23rd 2025, 12:25 pm
image

கந்தளாய் பேராற்று வெளிப் பகுதியில் காட்டு யானைகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளதால், அறுவடையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் தற்போது பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு ( 22) பேராற்று வெளி வயல் வெளிக்குள் மூன்று காட்டு யானைகள் புகுந்து நாசவேலையில் ஈடுபட்டுள்ளன. 

சுமார் பத்து நாட்களே ஆன பயிர்கள் யானைகளின் கால்களால் துவைக்கப்பட்டு, பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

இது, ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலங்களில் அத்துமீறும் இந்தக் காட்டு யானைகள், மூன்று நாட்களுக்கு முன்னர் பேராறு பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் புகுந்து சேதம் விளைவித்துள்ளன. 

அப்போது, அங்கிருந்த ஒரு முச்சக்கர வண்டியையும் சேதப்படுத்தியதுடன், சில தடுப்புச் சுவர்களையும் இடித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக விவசாய நிலங்களுக்கும், மக்களின் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தக் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர் உரிய மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடைக்கு தயாரான பயிர்களை துவம்சம் செய்த காட்டு யானைகள் கந்தளாய் பேராற்று வெளிப் பகுதியில் காட்டு யானைகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளதால், அறுவடையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் தற்போது பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.நேற்று இரவு ( 22) பேராற்று வெளி வயல் வெளிக்குள் மூன்று காட்டு யானைகள் புகுந்து நாசவேலையில் ஈடுபட்டுள்ளன. சுமார் பத்து நாட்களே ஆன பயிர்கள் யானைகளின் கால்களால் துவைக்கப்பட்டு, பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது, ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.விவசாய நிலங்களில் அத்துமீறும் இந்தக் காட்டு யானைகள், மூன்று நாட்களுக்கு முன்னர் பேராறு பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் புகுந்து சேதம் விளைவித்துள்ளன. அப்போது, அங்கிருந்த ஒரு முச்சக்கர வண்டியையும் சேதப்படுத்தியதுடன், சில தடுப்புச் சுவர்களையும் இடித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியாக விவசாய நிலங்களுக்கும், மக்களின் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தக் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர் உரிய மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement