இந்த வருட இறுதிக்குள் இலக்கிடப்பட்ட 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை அடையும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அருகம்பை பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்தும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.
குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பல நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனையைப் புதுப்பித்திருந்ததுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், ஒப்பீட்டளவில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுற்றுலா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருட இறுதிக்குள் இலக்கை அடையுமா இலங்கை - வெளியான அறிவிப்பு இந்த வருட இறுதிக்குள் இலக்கிடப்பட்ட 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை அடையும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த மாதம் அருகம்பை பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்தும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பல நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனையைப் புதுப்பித்திருந்ததுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், ஒப்பீட்டளவில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுற்றுலா தகவல்கள் தெரிவிக்கின்றன.