• Apr 28 2024

விடியற் காலையில் காணும் கனவுகள் பலிக்குமா ? சுவாரசியமான தகவல்! samugammedia

Tamil nila / Apr 16th 2023, 5:06 pm
image

Advertisement

கனவு என்பது பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயமாகும். பிறந்த குழந்தை தூக்கத்தில் சிரிப்பது கூட கனவு என்று தான் கூறுகின்றனர், இப்படி கனவு என்பது நமது விருப்பம், நமது ஆழ் மனதில் இருக்கும் ஆசை அல்லது அன்று நமது மனதை பாதித்த ஒரு செயல் இப்படி ஒரு சில விஷயங்கள் நமது கனவில் வருவதற்கு வாய்ப்புள்ளது.

பொதுவாக கனவுகள் என்பது நமது மனதில் ஒளிந்திருக்கும் ஆசை நிராசை போன்றவற்றின் வெளிப்பாடே கனவுகள் என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் மற்றும் ஞானிகளின் கருது இதற்கு முரண்பாடானது.

பொதுவாக நாம் பகலில் காணும் கனவுகள் எதுவும் பலிக்காது என்று கூறுவர். ஆனால் இரவு நேரத்தில் நான்காம் யாமத்தில், அதாவது விடியற்காலையில் காணும் கனவானது பலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் அதற்கும் சில விதி விலக்குகள் இருக்கின்றன. காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிக்கும் என்று “பஞ்சாங்க சாஸ்திரங்கள்” கூறுகின்றன.

இரவு முழுக்க பல கனவுகள் தொடர்ந்து வந்து அந்த கனவுகளின் தொடர்ச்சியாக விடியற்காலை கனவுகள் இருந்தால் அந்த கனவு பலிக்காது. நாம் காணும் கனவை நாமே மறந்துவிட்டால் அந்த கனவு பலிக்காது. அதிகாலையில் கனவை கண்ட பிறகு மீண்டும் தூங்கிவிட்டால் அந்த கனவு பலிக்காது.

அதே போல நாம் காணும் கனவுகள் அப்படியே நடக்குமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் தன் கனவில், வீட்டை சாணி போட்டு முழுகுகிறார் என்றால் அவர் வாழும் வீட்டில் விரைவில் ஏதோ களவு போகப் போகிறது என்று அர்த்தம். அதே போல ஒருவர் தன் கனவில் கடல் தாண்டி பறக்கிறார் என்றால் அவருக்கு விரைவில் பண வரவு அதிகரிக்கும் என்று அர்த்தம்.

இப்படி ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. விடியற் காலையில் காணும் கனவுகள் சில நல்ல பலன்களை தரும் சிலது தீய பலன்களை தரும். தீய பலன்களை தரும் கனவை விடியற்காலையில் கண்டோமானால் கோயிலிற்கு சென்று ஜெபிப்பது, இறைவனுக்கு அர்ச்சனை செய்வது, ஏழைகளுக்கு தானம் செய்வது போன்றவற்றை செய்வது நல்லது.

விடியற் காலையில் காணும் கனவுகள் பலிக்குமா சுவாரசியமான தகவல் samugammedia கனவு என்பது பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயமாகும். பிறந்த குழந்தை தூக்கத்தில் சிரிப்பது கூட கனவு என்று தான் கூறுகின்றனர், இப்படி கனவு என்பது நமது விருப்பம், நமது ஆழ் மனதில் இருக்கும் ஆசை அல்லது அன்று நமது மனதை பாதித்த ஒரு செயல் இப்படி ஒரு சில விஷயங்கள் நமது கனவில் வருவதற்கு வாய்ப்புள்ளது.பொதுவாக கனவுகள் என்பது நமது மனதில் ஒளிந்திருக்கும் ஆசை நிராசை போன்றவற்றின் வெளிப்பாடே கனவுகள் என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் மற்றும் ஞானிகளின் கருது இதற்கு முரண்பாடானது.பொதுவாக நாம் பகலில் காணும் கனவுகள் எதுவும் பலிக்காது என்று கூறுவர். ஆனால் இரவு நேரத்தில் நான்காம் யாமத்தில், அதாவது விடியற்காலையில் காணும் கனவானது பலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் அதற்கும் சில விதி விலக்குகள் இருக்கின்றன. காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிக்கும் என்று “பஞ்சாங்க சாஸ்திரங்கள்” கூறுகின்றன.இரவு முழுக்க பல கனவுகள் தொடர்ந்து வந்து அந்த கனவுகளின் தொடர்ச்சியாக விடியற்காலை கனவுகள் இருந்தால் அந்த கனவு பலிக்காது. நாம் காணும் கனவை நாமே மறந்துவிட்டால் அந்த கனவு பலிக்காது. அதிகாலையில் கனவை கண்ட பிறகு மீண்டும் தூங்கிவிட்டால் அந்த கனவு பலிக்காது.அதே போல நாம் காணும் கனவுகள் அப்படியே நடக்குமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் தன் கனவில், வீட்டை சாணி போட்டு முழுகுகிறார் என்றால் அவர் வாழும் வீட்டில் விரைவில் ஏதோ களவு போகப் போகிறது என்று அர்த்தம். அதே போல ஒருவர் தன் கனவில் கடல் தாண்டி பறக்கிறார் என்றால் அவருக்கு விரைவில் பண வரவு அதிகரிக்கும் என்று அர்த்தம்.இப்படி ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. விடியற் காலையில் காணும் கனவுகள் சில நல்ல பலன்களை தரும் சிலது தீய பலன்களை தரும். தீய பலன்களை தரும் கனவை விடியற்காலையில் கண்டோமானால் கோயிலிற்கு சென்று ஜெபிப்பது, இறைவனுக்கு அர்ச்சனை செய்வது, ஏழைகளுக்கு தானம் செய்வது போன்றவற்றை செய்வது நல்லது.

Advertisement

Advertisement

Advertisement