• Nov 06 2026

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா? அடுத்த வாரம் வெளியாகும் இறுதி முடிவு!

Chithra / Nov 5th 2026, 9:49 am
image


நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக பொதுமக்களின் வாய்மொழிக் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (05) முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.


நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டிற்காக மின் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய மின்கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் (National System Operator) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.


எனினும், குறித்த கோரிக்கையை மீளாய்வு செய்த ஆணைக்குழு, மின் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ளது.


இந்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்மொழி மூலமான கலந்தாலோசனை இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இதில் கருத்துகளை முன்வைப்பதற்காக பல்வேறு நுகர்வோர் குழுக்கள் மற்றும் மின்சாரத் துறையைச் சேர்ந்த அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 40க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.


இன்றைய கலந்தாலோசனையில் முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் யோசனைகளை ஆராய்ந்த பின்னர், முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.


மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா அடுத்த வாரம் வெளியாகும் இறுதி முடிவு நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பொதுமக்களின் வாய்மொழிக் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (05) முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டிற்காக மின் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய மின்கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் (National System Operator) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.எனினும், குறித்த கோரிக்கையை மீளாய்வு செய்த ஆணைக்குழு, மின் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ளது.இந்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்மொழி மூலமான கலந்தாலோசனை இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இதில் கருத்துகளை முன்வைப்பதற்காக பல்வேறு நுகர்வோர் குழுக்கள் மற்றும் மின்சாரத் துறையைச் சேர்ந்த அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 40க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.இன்றைய கலந்தாலோசனையில் முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் யோசனைகளை ஆராய்ந்த பின்னர், முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement