• Sep 20 2024

இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகள் மீண்டும் தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்படுமா? ? இம்ரான் மகரூப் கேள்வி!

Tamil nila / Jan 7th 2023, 1:34 pm
image

Advertisement

ஆயிரம் தேசிய பாடசாலை எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தெரிவுசெய்கின்ற சந்தர்ப்பத்தில் தகுதியான பாடசாலைகள் உள்வாங்கப்படாமல் தகுதியற்ற பாடசாலைகள் சில உள்வாங்கப்பட்டுள்தாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


தேசிய பாடசாலைகள் உருவாக்குகின்ற திட்டங்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தகுதியில்லாத பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளது  ஏன்? இவ்வாறான நிலைக்கு காரணம்  என்ன? இதில் அரசியல் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம்  கல்வி மட்டங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், சில பாடசாலைகளுக்கு இலட்சக்கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை தேசிய பாடசாலையாக பிரகரணப்படுத்தப்பட்ட போதிலும் அவை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே இந்தப் பாடசாலைகள் தெரிவு செய்யப்படுகின்ற விடயம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமா? அல்லது இடைநிறுத்தப்படுமா? என்று கல்வி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது, நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது, பொருத்தமற்ற பாடசாலைகள் பெயரிடப்பட்டுள்ளன, தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் என பதிலளித்தார்.


இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகள் மீண்டும் தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்படுமா இம்ரான் மகரூப் கேள்வி ஆயிரம் தேசிய பாடசாலை எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தெரிவுசெய்கின்ற சந்தர்ப்பத்தில் தகுதியான பாடசாலைகள் உள்வாங்கப்படாமல் தகுதியற்ற பாடசாலைகள் சில உள்வாங்கப்பட்டுள்தாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.தேசிய பாடசாலைகள் உருவாக்குகின்ற திட்டங்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தகுதியில்லாத பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளது  ஏன் இவ்வாறான நிலைக்கு காரணம்  என்ன இதில் அரசியல் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம்  கல்வி மட்டங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில், சில பாடசாலைகளுக்கு இலட்சக்கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை தேசிய பாடசாலையாக பிரகரணப்படுத்தப்பட்ட போதிலும் அவை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே இந்தப் பாடசாலைகள் தெரிவு செய்யப்படுகின்ற விடயம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமா அல்லது இடைநிறுத்தப்படுமா என்று கல்வி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது, நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது, பொருத்தமற்ற பாடசாலைகள் பெயரிடப்பட்டுள்ளன, தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் என பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement