• May 10 2024

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் மாற்றமா..? வெளியான தகவல் samugammedia

Chithra / Nov 27th 2023, 10:43 am
image

Advertisement

 

நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹ்மதுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் அவருடைய நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஹாபிஸ் நஸீரை கிழக்கு மாகாண ஆளுநராக, ஜனாதிபதி நியமிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

எனினும், அடுத்த தேர்தல் வரை ஆளுநர் பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் மாற்றமா. வெளியான தகவல் samugammedia  நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹ்மதுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது.இந்த வழக்கில் அவருடைய நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டது.இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஹாபிஸ் நஸீரை கிழக்கு மாகாண ஆளுநராக, ஜனாதிபதி நியமிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.எனினும், அடுத்த தேர்தல் வரை ஆளுநர் பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement