• May 10 2024

நாட்டில் வரிசை யுகம் மீண்டும் ஏற்படுமா - காமினி லொக்குகே தெரிவித்த கருத்து.!

Tamil nila / Feb 7th 2023, 9:39 am
image

Advertisement

நாட்டில் மீண்டும் வரிசையுகத்தை ஏற்படுத்தாது நாட்டை சீரான வகையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டு வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இன்று பாரிய சவால்கள் காணப்படுகின்றன. நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். 


மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படாமல் அரசாங்கத்தை கொண்டுசெல்ல வேண்டியது அவசியம்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை எட்டியுள்ளன.


எனவே எதிர்வரும் மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.


சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கடைக்கப்படும் பட்சத்தில் சகல சலுகைகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.


நாடு என்ற முறையில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.


நாட்டு மக்கள் இன்று தெளிவாகவே உள்ளனர். இன்று அனைவருக்குமே நெருக்கடியான காலக்கட்டமாகும். 

எவ்வாறாயினும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி நல்லிணக்க சமூகத்துடன் வாழக்கூடிய நிலைமையை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வரிசை யுகம் மீண்டும் ஏற்படுமா - காமினி லொக்குகே தெரிவித்த கருத்து. நாட்டில் மீண்டும் வரிசையுகத்தை ஏற்படுத்தாது நாட்டை சீரான வகையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டு வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.இன்று பாரிய சவால்கள் காணப்படுகின்றன. நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படாமல் அரசாங்கத்தை கொண்டுசெல்ல வேண்டியது அவசியம்.குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை எட்டியுள்ளன.எனவே எதிர்வரும் மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கடைக்கப்படும் பட்சத்தில் சகல சலுகைகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.நாடு என்ற முறையில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.நாட்டு மக்கள் இன்று தெளிவாகவே உள்ளனர். இன்று அனைவருக்குமே நெருக்கடியான காலக்கட்டமாகும். எவ்வாறாயினும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி நல்லிணக்க சமூகத்துடன் வாழக்கூடிய நிலைமையை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement