• May 17 2024

உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா? சூழ்ந்துள்ள சந்தேகம்!

Tamil nila / Jan 6th 2023, 10:19 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதுஇ எதிர்வரும் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.


தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் 4 நிலைப்பாடுகளை கொண்டுள்ளதன் காரணமாக. ஒரு நிலைப்பாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.


அதேநேரம், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான பின்னணி மற்றும் நிலைமைகள் தொடர்பில் தாம் தெளிவுப்படுத்துவதாக சட்டமா அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.


ஏதேனும் சட்டச் சிக்கல் நிலவுமாயின் அது தொடர்பில் நேரடியாக தம்மிடம் வினவுமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.


எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் நான்கு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதன் காரணமாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவுற்றாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா சூழ்ந்துள்ள சந்தேகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதுஇ எதிர்வரும் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் 4 நிலைப்பாடுகளை கொண்டுள்ளதன் காரணமாக. ஒரு நிலைப்பாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.அதேநேரம், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான பின்னணி மற்றும் நிலைமைகள் தொடர்பில் தாம் தெளிவுப்படுத்துவதாக சட்டமா அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.ஏதேனும் சட்டச் சிக்கல் நிலவுமாயின் அது தொடர்பில் நேரடியாக தம்மிடம் வினவுமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் நான்கு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதன் காரணமாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவுற்றாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement