• May 19 2024

இலங்கையில் தமிழ் மக்களை வாழ விடுவீர்களா – சபையில் கேள்வி எழுப்பிய சிறிதரன்.! samugammedia

Sharmi / May 9th 2023, 2:18 pm
image

Advertisement

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற பௌத்த மற்றும் புத்த ஆக்கிரமிப்பிற்குள்ள வாழமுடியாது தமிழ் மக்கள் திணறி வருவதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் வடங்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகளின் ஆணவ பட்டியலையும் சபையில் முன்வைத்திருந்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிடம் மேலும் பல மாவட்டங்களில் சைவ ஆலையங்கள் அழிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுள்ளதாகவும் அதனை திகதி வாரியாக ஆவணப்படுத்தி இன்று சபையில் முன்வைத்திருந்தார்.

எனினும் சிறிதரனுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் அதனை முழுமையாக சமர்ப்பிக்கமுடியாத நிலையில் அவரது ஒலிவாங்கி இடையில் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவண அறிக்கையை ஹன்சாட்டில் பதியுமாறு சிறிதரன் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

தமிழர்கள் இந்த நாட்டில் வாழமுடியவில்லை என்றும் தமிழர்கள் மிகப்பெரிய ஆக்கிரமிப்பிற்குள் வாழ்கின்றபோதுஅரசாங்கம் பொருளாதாரம் வரிச்சட்டங்கள் என்று கூறிக்கொண்டு இருப்பதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்

இலங்கையில் தமிழ் மக்களை வாழ விடுவீர்களா – சபையில் கேள்வி எழுப்பிய சிறிதரன். samugammedia வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற பௌத்த மற்றும் புத்த ஆக்கிரமிப்பிற்குள்ள வாழமுடியாது தமிழ் மக்கள் திணறி வருவதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.அத்துடன் வடங்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகளின் ஆணவ பட்டியலையும் சபையில் முன்வைத்திருந்தார்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிடம் மேலும் பல மாவட்டங்களில் சைவ ஆலையங்கள் அழிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுள்ளதாகவும் அதனை திகதி வாரியாக ஆவணப்படுத்தி இன்று சபையில் முன்வைத்திருந்தார்.எனினும் சிறிதரனுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் அதனை முழுமையாக சமர்ப்பிக்கமுடியாத நிலையில் அவரது ஒலிவாங்கி இடையில் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவண அறிக்கையை ஹன்சாட்டில் பதியுமாறு சிறிதரன் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.தமிழர்கள் இந்த நாட்டில் வாழமுடியவில்லை என்றும் தமிழர்கள் மிகப்பெரிய ஆக்கிரமிப்பிற்குள் வாழ்கின்றபோதுஅரசாங்கம் பொருளாதாரம் வரிச்சட்டங்கள் என்று கூறிக்கொண்டு இருப்பதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.எனவே அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement