• Nov 22 2024

இலங்கையில் குளிர் காலத்தில் அதிகரிக்கும் நோய்கள் - அறிகுறிகள் தென்பட்டால் அவதானம்

Chithra / Nov 13th 2024, 7:37 am
image

 

இலங்கையில் அண்மைய நாட்களாக, கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றுகள்,  குளிர் காலமான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகமாகப் பரவும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நோய் ஏற்பட்ட சிறுவர்களின் கைகள், கால்கள் அல்லது வாயில் சிறிய சிவப்பு அல்லது வெள்ளை கொப்புளங்கள், பழுப்பு நிற செதில்களுடன் கூடிய சிவப்பு சொறி அல்லது வெளிப்புற கைகளில் சொறி போன்ற அறிகுறிகள் தென்படும்.

இந்தநிலையில், குறித்த அறிகுறிகள் தென்பட்டால், ஏனையோருக்கு நோய்ப்பரவலை தடுக்கும் முகமாக, குறித்த சிறுவர்களை 3 அல்லது 4 நாட்கள் வரை வீட்டில் வைத்திருக்குமாறு தீபால் பெரேரா பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், சிகிச்சைகளுக்கு உட்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார். 

இதற்கிடையில், டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸுடன் தொடர்புடைய பிற நோய்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

இலங்கையில் குளிர் காலத்தில் அதிகரிக்கும் நோய்கள் - அறிகுறிகள் தென்பட்டால் அவதானம்  இலங்கையில் அண்மைய நாட்களாக, கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வைரஸ் தொற்றுகள்,  குளிர் காலமான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகமாகப் பரவும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.இந்த நோய் ஏற்பட்ட சிறுவர்களின் கைகள், கால்கள் அல்லது வாயில் சிறிய சிவப்பு அல்லது வெள்ளை கொப்புளங்கள், பழுப்பு நிற செதில்களுடன் கூடிய சிவப்பு சொறி அல்லது வெளிப்புற கைகளில் சொறி போன்ற அறிகுறிகள் தென்படும்.இந்தநிலையில், குறித்த அறிகுறிகள் தென்பட்டால், ஏனையோருக்கு நோய்ப்பரவலை தடுக்கும் முகமாக, குறித்த சிறுவர்களை 3 அல்லது 4 நாட்கள் வரை வீட்டில் வைத்திருக்குமாறு தீபால் பெரேரா பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன், சிகிச்சைகளுக்கு உட்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார். இதற்கிடையில், டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸுடன் தொடர்புடைய பிற நோய்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement