இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை பெண் மற்றும் இலங்கைக்கு அழைத்து வர உதவிய இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய விஜிதா என்ற பெண் கடந்த 2023 டிசம்பர் மாதம் விமான மூலமாக 6 மாத கால விசாவில் சென்னைக்குச் சென்று பாண்டிச்சேரியில் தங்கி மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், விசா காலம் முடிவடைந்ததால் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேசு என்பவரை அணுகி 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து நேற்று புதன்கிழமை (17) இரவு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட தயாராக நின்ற விஜிதாவையும்,
இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப உதவிய தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருளாந்தம் மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகிய மூவரையும் ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உள்ளிட்ட மூவர் கைது. இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை பெண் மற்றும் இலங்கைக்கு அழைத்து வர உதவிய இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய விஜிதா என்ற பெண் கடந்த 2023 டிசம்பர் மாதம் விமான மூலமாக 6 மாத கால விசாவில் சென்னைக்குச் சென்று பாண்டிச்சேரியில் தங்கி மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், விசா காலம் முடிவடைந்ததால் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேசு என்பவரை அணுகி 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து நேற்று புதன்கிழமை (17) இரவு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட தயாராக நின்ற விஜிதாவையும்,இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப உதவிய தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருளாந்தம் மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகிய மூவரையும் ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.