• Nov 22 2024

திருகோணமலையில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் ஒருவர் கைது

Chithra / Jul 19th 2024, 2:33 pm
image

  

திருகோணமலை   - சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் ஆறாம்வட்டாரத்தில் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கை, நேற்று  சம்பூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 பியர் ரின்களும், இரண்டு சாராய போத்தல்களும் ஒரு கசிப்பு போத்தலும்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும், அந்த பெண் சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

அதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தொடர்ச்சியான தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அனுமதி இல்லாத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை போன்ற இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் இன்று மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

திருகோணமலையில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் ஒருவர் கைது   திருகோணமலை   - சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் ஆறாம்வட்டாரத்தில் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை, நேற்று  சம்பூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 பியர் ரின்களும், இரண்டு சாராய போத்தல்களும் ஒரு கசிப்பு போத்தலும்  கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அந்த பெண் சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தொடர்ச்சியான தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அனுமதி இல்லாத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை போன்ற இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் இன்று மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement