கம்பஹா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண், சுவாச கோளாறு காரணமாக அண்மையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இதன்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
65 வயதுடைய குறித்த பெண்ணுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவருக்கும் கொவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அண்மையில் பதிவான முதலாவது மரணம் இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்.samugammedia கம்பஹா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண், சுவாச கோளாறு காரணமாக அண்மையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இதன்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.65 வயதுடைய குறித்த பெண்ணுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவருக்கும் கொவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கொவிட்-19 வைரஸ் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அண்மையில் பதிவான முதலாவது மரணம் இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.