• Aug 26 2025

குழந்தையை காப்பாற்ற அதிபயங்கர ஆற்றை கடந்த தாதி துணிச்சலை பாராட்டி குவியும் பாராட்டுக்கள்

shanuja / Aug 25th 2025, 4:07 pm
image

நீர் வழிந்தோடிக்கொண்டிருக்கையில் அந்த ஓடையைப் பெண் ஒருவர் பாய்ந்து சென்றுள்ள காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. 


இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், சௌஹர்காட்டியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. 


வெள்ளத்தால் ஓடைகள் நிரம்பிய நீர்த்தேக்கத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்று மாட்டிக்கொண்டது. அந்தக் குழந்தையை அடைவதற்கு ஊழியரான பெண்மணி  ஒருவர் ஓடையைக் கடந்து சென்றுள்ளார். 


ஓடைகளில் வெள்ளம் ஆங்காங்கே அலைமோதிக் கொண்டிருந்தததை சற்றும் பயப்படாமல் துணிச்சலாக ஒடை வழியாக பாய்ந்து குழந்தையை அடைந்தார். 


நிரம்பி வழியும் ஓடையை குறித்த பெண்  தைரியமாகக் கடந்து செல்வது காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது.


காணொளியைப் பார்த்த பலர் குறித்த பெண்ணின் துணிச்சலான செயலைப் பாராட்டி வருகின்றனர்.  


குறித்த பெண்ணின் துணிகர செயல்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னணிப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களையும் எடுத்துக்காட்டுகிறது.

குழந்தையை காப்பாற்ற அதிபயங்கர ஆற்றை கடந்த தாதி துணிச்சலை பாராட்டி குவியும் பாராட்டுக்கள் நீர் வழிந்தோடிக்கொண்டிருக்கையில் அந்த ஓடையைப் பெண் ஒருவர் பாய்ந்து சென்றுள்ள காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், சௌஹர்காட்டியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. வெள்ளத்தால் ஓடைகள் நிரம்பிய நீர்த்தேக்கத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்று மாட்டிக்கொண்டது. அந்தக் குழந்தையை அடைவதற்கு ஊழியரான பெண்மணி  ஒருவர் ஓடையைக் கடந்து சென்றுள்ளார். ஓடைகளில் வெள்ளம் ஆங்காங்கே அலைமோதிக் கொண்டிருந்தததை சற்றும் பயப்படாமல் துணிச்சலாக ஒடை வழியாக பாய்ந்து குழந்தையை அடைந்தார். நிரம்பி வழியும் ஓடையை குறித்த பெண்  தைரியமாகக் கடந்து செல்வது காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது.காணொளியைப் பார்த்த பலர் குறித்த பெண்ணின் துணிச்சலான செயலைப் பாராட்டி வருகின்றனர்.  குறித்த பெண்ணின் துணிகர செயல்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னணிப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களையும் எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

Advertisement

Advertisement