• Feb 06 2025

விபத்தில் சிக்கி பெண் பலி! - வேனின் சாரதி தப்பியோட்டம்

Chithra / Sep 2nd 2024, 10:30 am
image

 

யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கி பயணித்த வேன் வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் யக்கல பகுதியைச் சேர்ந்த  48 வயதுடைய  பெண்ணொருவராவார்.

குறித்த வேனின் சாரதி வண்டியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி பெண் பலி - வேனின் சாரதி தப்பியோட்டம்  யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கி பயணித்த வேன் வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர் யக்கல பகுதியைச் சேர்ந்த  48 வயதுடைய  பெண்ணொருவராவார்.குறித்த வேனின் சாரதி வண்டியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து, சந்தேக நபரை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement