• Sep 13 2025

6 அரிய வகை பாம்புகளுடன் இலங்கை வந்த பெண்; கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

Chithra / Sep 12th 2025, 11:11 am
image

 

உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர்.

40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் சேர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.

1 புள்ளிகள் கொண்ட ராஜ் நாகம், 1 மஞ்சள் அனகோண்டா, 3 ஹோண்டுரான் பால் பாம்புகள், 1 உருளை  மலைப்பாம்பு என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த பாம்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகள் என தெரியவந்துள்ளது.


6 அரிய வகை பாம்புகளுடன் இலங்கை வந்த பெண்; கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது  உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர்.40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் சேர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.1 புள்ளிகள் கொண்ட ராஜ் நாகம், 1 மஞ்சள் அனகோண்டா, 3 ஹோண்டுரான் பால் பாம்புகள், 1 உருளை  மலைப்பாம்பு என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பாம்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகள் என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement