• Apr 30 2024

செங்கலடி பிரதேச வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடிய பெண்கள்

harsha / Dec 6th 2022, 6:28 pm
image

Advertisement

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வட கிழக்கைச்சேர்ந்த 08 மாவட்டங்களில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்றய தினம் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய ஆர்ப்பாட்டம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை 'வடகிழக்கு பெண்கள் ஒன்றியம்' ஏற்பாடு செய்திருந்ததுடன்,பெண்கள், நோயாளிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அடிப்படை சுகாதார உரிமை கோரியும், நாட்டில் அத்தியாவசிய மருந்து சேவைகளும் மருத்துவ சேவைகளும் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும் எனவும் கோரியே குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறிப்பாக மருந்துத்தட்டுப்பாடு மற்றும் மருத்துவச்சேவை வடகிழக்கில் வாழும் மக்களையே அதிகமாக பாதிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமான மருந்து பற்றாக்குறையானது மிகவும் அதிகமாக பற்றாக்குறையானதால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக இலங்கை அரசும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.

செங்கலடி பிரதேச வைத்தியசாலை முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பேரிணியாக செங்கலடி சந்தி வரை சென்றனர்.தேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜரை செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்தனர்.

செங்கலடி பிரதேச வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடிய பெண்கள் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.வட கிழக்கைச்சேர்ந்த 08 மாவட்டங்களில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்றய தினம் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய ஆர்ப்பாட்டம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன் இடம்பெற்றது.குறித்த ஆர்ப்பாட்டத்தினை 'வடகிழக்கு பெண்கள் ஒன்றியம்' ஏற்பாடு செய்திருந்ததுடன்,பெண்கள், நோயாளிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.அடிப்படை சுகாதார உரிமை கோரியும், நாட்டில் அத்தியாவசிய மருந்து சேவைகளும் மருத்துவ சேவைகளும் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும் எனவும் கோரியே குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.குறிப்பாக மருந்துத்தட்டுப்பாடு மற்றும் மருத்துவச்சேவை வடகிழக்கில் வாழும் மக்களையே அதிகமாக பாதிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமான மருந்து பற்றாக்குறையானது மிகவும் அதிகமாக பற்றாக்குறையானதால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்திருந்தனர்.இது தொடர்பாக இலங்கை அரசும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.செங்கலடி பிரதேச வைத்தியசாலை முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பேரிணியாக செங்கலடி சந்தி வரை சென்றனர்.தேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜரை செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement