திருகோணமலை - கந்தளாய் பிரதேச சிங்கள இளைஞர்களுக்கான
அடிப்படை மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சமூக தொடர்பாடல் தொடர்பிலான
பயிற்சிப்பட்டறை கந்தளாய் பிரதேசத்தில் இன்று (24) இடம்பெற்றது.
இதனை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் இஸ்ஸடீன் வளவாளராக
கலந்துகொண்டு மனித உரிமைகள் தொடர்பாக பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு
விளக்கமளித்திருந்தார்.