உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இன்று (07) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக அஜய் பங்காவின் வருகை அமையவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அஜய் பங்கா இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அஜய் பங்காவின் வருகையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தனியார் துறைத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உலக வங்கியின் தலைவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகளுக்கு பின் இலங்கைக்கு வருகை தரும் உலக வங்கியின் தலைவர் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இன்று (07) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக அஜய் பங்காவின் வருகை அமையவுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அஜய் பங்கா இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.அஜய் பங்காவின் வருகையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தனியார் துறைத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, உலக வங்கியின் தலைவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.