• May 03 2024

உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 42 மில்லியன் டொலர் பரிசு!

Chithra / Dec 18th 2022, 12:36 pm
image

Advertisement

2022 பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கட்டாரில் உள்ள லுசைல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த மைதானத்தில் 80,000 பார்வையாளர்கள் போட்டியை கண்டுகழிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகக்கிண்ணத் தொடரின் ஆரம்பம் முதல் இதுவரை 2.89 மில்லியன் அனுமதிச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இன்று இரவு கால்பந்து உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனாகும் அணிக்கு, 42 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கிடைக்கும்.

இரண்டாம் இடம்பெறும் அணிக்கான பரிசுத் தொகை 30 மில்லியன் டொலர்களாகும்.

நேற்றைய  போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்த குரேஷியாவுக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 42 மில்லியன் டொலர் பரிசு 2022 பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கட்டாரில் உள்ள லுசைல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.இந்த மைதானத்தில் 80,000 பார்வையாளர்கள் போட்டியை கண்டுகழிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உலகக்கிண்ணத் தொடரின் ஆரம்பம் முதல் இதுவரை 2.89 மில்லியன் அனுமதிச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, இன்று இரவு கால்பந்து உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனாகும் அணிக்கு, 42 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கிடைக்கும்.இரண்டாம் இடம்பெறும் அணிக்கான பரிசுத் தொகை 30 மில்லியன் டொலர்களாகும்.நேற்றைய  போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்த குரேஷியாவுக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement