• Nov 14 2024

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலை தடுப்பு தினத்திற்கான விருது இம்முறை இலங்கைக்கு...!

Sharmi / Jun 8th 2024, 11:02 am
image

விகாரமஹாதேவி பூங்காவில்  கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில், சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி அலகா சிங், சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பி.ஜி. மஹிபால, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர். அலன் லுடோவிக், சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார ஸ்தாபனம் (றுர்ழு) ஒவ்வொரு ஆண்டும் புகையிலை கட்டுப்பாட்டுத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த பங்களிப்பை புகையிலை தடுப்பு தின விருதுகள் மூலம் அங்கீகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், 2024ஆம் ஆண்டிற்கான விருது மதுசாரம் மற்றும்போதைப்பொருள் தகவல் நிலைய்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

புகையிலை பாவனையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் புகையிலை நிறுவனத்தின் தந்திரோபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய திட்டம் உலக புகைத்தல் தடுப்பு தினமாகும். இத்தினமானது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி; உலக புகையிலை தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, இந்த வருடத்தின் தொனிப்பொருளில் 'புகையிலை கைத்தொழிலின் தந்திரோபாயங்களிலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளன் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது, கடந்த 30 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக புகையிலை பாவனையையுமு;, விநியோகத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவும், முறையான கொள்கைகளை உருவாக்குவதற்கும் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமைக் குறிபபிடத்தக்கது. 





உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலை தடுப்பு தினத்திற்கான விருது இம்முறை இலங்கைக்கு. விகாரமஹாதேவி பூங்காவில்  கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி அலகா சிங், சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பி.ஜி. மஹிபால, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர். அலன் லுடோவிக், சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.உலக சுகாதார ஸ்தாபனம் (றுர்ழு) ஒவ்வொரு ஆண்டும் புகையிலை கட்டுப்பாட்டுத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த பங்களிப்பை புகையிலை தடுப்பு தின விருதுகள் மூலம் அங்கீகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், 2024ஆம் ஆண்டிற்கான விருது மதுசாரம் மற்றும்போதைப்பொருள் தகவல் நிலைய்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.புகையிலை பாவனையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் புகையிலை நிறுவனத்தின் தந்திரோபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய திட்டம் உலக புகைத்தல் தடுப்பு தினமாகும். இத்தினமானது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி; உலக புகையிலை தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் தொனிப்பொருளில் 'புகையிலை கைத்தொழிலின் தந்திரோபாயங்களிலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளன் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது, கடந்த 30 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக புகையிலை பாவனையையுமு;, விநியோகத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவும், முறையான கொள்கைகளை உருவாக்குவதற்கும் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமைக் குறிபபிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement