இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழின் படுகொலை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ் நகரிலிருந்து ஆரம்பமானது.
இதன்பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இதன்பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தமிழின் படுகொலை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ் நகரிலிருந்து ஆரம்பமானது.இதன்பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.