• May 09 2024

ரகசிய நடைமேடை தளத்துடன் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்...!samugammedia

Sharmi / Jun 1st 2023, 5:46 pm
image

Advertisement

உலகின்  மிகப்பெரிய ரயில் நிலையம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.

கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலே   உலகின் மிகப்பெரிய ரயில் நிலையமாகும்.  இந்த ரயில் நிலையம் 1903 முதல் 1913 வரை கட்டப்பட்டுள்ளது.

இந்த நியூயார்க் ரயில் நிலையத்தில் மொத்தம் 44 நடைமேடைகள் காணப்படுவதுடன், மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இங்கு நிற்க முடியும். அத்துடன் இங்கு தினசரி சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் செல்கின்றன.

ஒரு லட்சத்து 25,000 பயணிகள் இந்த ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர். இந்த ரயில் முனையத்தில் இரண்டு அண்டர் கிரவுண்ட்  நிலைகள் காணப்படுகின்றன.

அது மட்டுமன்றி, 41 தடங்கள் மேல் மட்டத்திலும், 26 தடங்கள் கீழ் மட்டத்திலும் செல்கின்றன. இந்த நிலையம் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளதுடன்,  ரகசிய நடைமேடை தளமும் கட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக இந்த நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்ளவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் டிராக் 61 என்று அழைக்கப்படும் அந்த நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் என்று  கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரகசிய நடைமேடை தளத்துடன் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்.samugammedia உலகின்  மிகப்பெரிய ரயில் நிலையம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலே   உலகின் மிகப்பெரிய ரயில் நிலையமாகும்.  இந்த ரயில் நிலையம் 1903 முதல் 1913 வரை கட்டப்பட்டுள்ளது. இந்த நியூயார்க் ரயில் நிலையத்தில் மொத்தம் 44 நடைமேடைகள் காணப்படுவதுடன், மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இங்கு நிற்க முடியும். அத்துடன் இங்கு தினசரி சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் செல்கின்றன.ஒரு லட்சத்து 25,000 பயணிகள் இந்த ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர். இந்த ரயில் முனையத்தில் இரண்டு அண்டர் கிரவுண்ட்  நிலைகள் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி, 41 தடங்கள் மேல் மட்டத்திலும், 26 தடங்கள் கீழ் மட்டத்திலும் செல்கின்றன. இந்த நிலையம் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளதுடன்,  ரகசிய நடைமேடை தளமும் கட்டப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக இந்த நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்ளவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் டிராக் 61 என்று அழைக்கப்படும் அந்த நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் என்று  கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement