• Mar 29 2024

மானிய உரத்தில் புழுக்கள் - விவசாயிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Chithra / Jan 29th 2023, 8:38 am
image

Advertisement

விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா மானிய உர்த்தில் புழுக்கள் காணப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் பெறப்பட்ட யூரியா உரத்தில் புழுக்கள் இருப்பதாக மகாவலி பி பிராந்தியத்தின் திம்புலாகல மனம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அதன்படி மனம்பிட்டி விவசாய சேவை நிலைய அதிகாரிகளும் இதனை பரிசோதிக்க வந்துள்ளனர். பின்னர், உர மாதிரிகள் கூடுதல் பரிசோதனைக்காக வேளாண் துறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

எனினும், யூரியா, அமோனியா இரசாயன உரம் என்றும், அதில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்றும் தேசிய உர செயலகம் கூறியுள்ளது.

மானிய உரத்தில் புழுக்கள் - விவசாயிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா மானிய உர்த்தில் புழுக்கள் காணப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் பெறப்பட்ட யூரியா உரத்தில் புழுக்கள் இருப்பதாக மகாவலி பி பிராந்தியத்தின் திம்புலாகல மனம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதன்படி மனம்பிட்டி விவசாய சேவை நிலைய அதிகாரிகளும் இதனை பரிசோதிக்க வந்துள்ளனர். பின்னர், உர மாதிரிகள் கூடுதல் பரிசோதனைக்காக வேளாண் துறைக்கு கொண்டு செல்லப்பட்டன.எனினும், யூரியா, அமோனியா இரசாயன உரம் என்றும், அதில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்றும் தேசிய உர செயலகம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement