• May 17 2024

உடப்பு பெருங்கடல் பிரதேசத்தில் யாத்திரா படகு விபத்து! SamugamMedia

Tamil nila / Mar 9th 2023, 9:55 pm
image

Advertisement

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு பெருங்கடல் பிரதேசத்தில் யாத்திரா படகு ஒன்று விபத்துக்குள்ளாகியள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து நேற்று (08) மாலை புறப்பட்டு உடப்பின் ஊடாக திருகோணமலைக்கு கடற்றொழிலுக்காகச் சென்ற யாத்திரா படகு  ஒன்று நேற்று இரவு உடப்பு-பாரிபாடு ஆழ்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர் விபத்துக்குள்ளான யாத்திரா படகில் இருந்த ஆறு மீனவர்களும் அப்பகுதியில் உள்ள மற்றொரு படகின் உதவியுடன் கரையை மீனவர்கள் வந்தடைந்துடன் யாத்திரா படகையும் கரை சேர்த்துள்ளனர்.

இருந்த போதிலும் யாத்திரா படகில் இருந்த பொருட்களை கரையில் சேர்க்க முடியாத நிலையில் பெகோ இயந்திரத்தின் உதவியுடன் கரைக்கு மேல் கொண்டும் வரும் முயற்சியில் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான படகின் பெறுமதி சுமார் மூன்று கோடி ரூபாகாவும்.அதனுள் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலை மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடப்பு பெருங்கடல் பிரதேசத்தில் யாத்திரா படகு விபத்து SamugamMedia முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு பெருங்கடல் பிரதேசத்தில் யாத்திரா படகு ஒன்று விபத்துக்குள்ளாகியள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து நேற்று (08) மாலை புறப்பட்டு உடப்பின் ஊடாக திருகோணமலைக்கு கடற்றொழிலுக்காகச் சென்ற யாத்திரா படகு  ஒன்று நேற்று இரவு உடப்பு-பாரிபாடு ஆழ்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் விபத்துக்குள்ளான யாத்திரா படகில் இருந்த ஆறு மீனவர்களும் அப்பகுதியில் உள்ள மற்றொரு படகின் உதவியுடன் கரையை மீனவர்கள் வந்தடைந்துடன் யாத்திரா படகையும் கரை சேர்த்துள்ளனர்.இருந்த போதிலும் யாத்திரா படகில் இருந்த பொருட்களை கரையில் சேர்க்க முடியாத நிலையில் பெகோ இயந்திரத்தின் உதவியுடன் கரைக்கு மேல் கொண்டும் வரும் முயற்சியில் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.விபத்துக்குள்ளான படகின் பெறுமதி சுமார் மூன்று கோடி ரூபாகாவும்.அதனுள் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலை மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement