• May 02 2024

அரசால் அத்துமீறப்படும் வணக்க தலங்கள் மீதான வன்முறை- சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்! SamugamMedia

Sharmi / Mar 9th 2023, 9:48 pm
image

Advertisement

அரசால் அத்துமீறப்படும் வணக்க தலங்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (09) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக என்றுமில்லாத அளவிற்கு சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றமையும் அவைகளின் புனருத்தானங்கள் நிறுத்தப்படுகின்றமையும் திட்டமிட்ட ஓர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடைபெறுகின்றமை பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. பௌத்தர்களுக்கு ஓர் நீதி இந்துக்களுக்கு ஒரு நீதி என்கின்ற மனப்பாங்கில் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். 

வெடுக்குநாறி மலை வழிபாட்டு அபிவிருத்திகள் நீதிமன்றால் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குருந்தூர் ஐயனார் ஆலயத்தை நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி பொலிசாரின் பாதுகாப்புகளோடு நடைபெறுகின்றது எனில் அதனை வெளிக்கொணர்ந்தும் சட்டம் இன்னும் தூங்கிக் கொண்டா உள்ளது.

பௌத்த காலாகாலமாக புராணகால வரலாற்றுக் காலம் முதல் கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் இருந்தே கீரிமலை சிவன் ஆலயமானது அமைந்திருந்தமைக்கான சான்றுகள் வரலாறுகள் உண்டு. அதன் அருகே பாதாளகங்கை எனப்படும் நன்நீர் கிணற்றுடன் கூடியதாக இருந்தது இதன் அருகே சித்தர்களின் தியான மடமும் இருந்தன. அருகே சடையம்மாவின் சமாதியுடன் சடையம்மா மடம் என்பனவும் இருந்தன.

இதேபோன்று அப்பகுதியிலே நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குருவின் சமாதி என்பன அங்கே மிக நீண்டகாலமாக இருந்தது.

அதேபோன்றே இங்கு பழமையான கதிரை ஆண்டவர் முருகன் ஆலயமும் இருந்தது. இவ்வாறான ஆன்மீக அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மேல்தான் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது 
 
இது தொடர்பில் மிக நீண்ட காலமாகவே மறைக்கப்பட்டவை தற்போதுதான் வெளியே வெளிவந்துள்ளது. இவற்றை அழித்த செயலை ஒருபோதும் எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். இந்த ஆடம்பர மாளிகை யாருக்கு தேவை. மீண்டும் இருந்த இடத்தில் சிவாலயம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும். புனைகதைகளோடு வரலாறு கொண்ட நீங்களே இவ்வாறு நடந்து கொள்ளும் போது வாழ்ந்த வரலாறு உடைய நாம் எதற்கு அஞ்ச வேண்டும் எனவே அரசியல் வாதிகள் இதில் தலையிடாமை பெரும் வருத்தமழிக்கிறது. 

அரசாங்கத்திற்கு இந்த தீவில் நிரந்தரமான அமைதி நிலவ வேண்டுமேயானால் இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாகவே வேண்டும் இவை தொடர்ந்தால் இன்னும் வன்மங்களும் எதிர்ப்புகளுமே தொடரும் அது பாரிய அழிவிற்கே வழிவகுக்கும். 

எனவே ஆண்டவன் தீர்ப்பு என்று ஒன்று வரும் அப்போது அனைத்தும் கைமீறிப்போய்நிக்கும் எனவே பழைய நிலமைகள் ஏற்படுத்தப்பட்டே ஆக வேண்டும். மீண்டும் சிவாலயமும் சமாதிகளும் எழுப்பப்படவே வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசால் அத்துமீறப்படும் வணக்க தலங்கள் மீதான வன்முறை- சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம் SamugamMedia அரசால் அத்துமீறப்படும் வணக்க தலங்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (09) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அண்மைக்காலமாக என்றுமில்லாத அளவிற்கு சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றமையும் அவைகளின் புனருத்தானங்கள் நிறுத்தப்படுகின்றமையும் திட்டமிட்ட ஓர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடைபெறுகின்றமை பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. பௌத்தர்களுக்கு ஓர் நீதி இந்துக்களுக்கு ஒரு நீதி என்கின்ற மனப்பாங்கில் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். வெடுக்குநாறி மலை வழிபாட்டு அபிவிருத்திகள் நீதிமன்றால் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குருந்தூர் ஐயனார் ஆலயத்தை நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி பொலிசாரின் பாதுகாப்புகளோடு நடைபெறுகின்றது எனில் அதனை வெளிக்கொணர்ந்தும் சட்டம் இன்னும் தூங்கிக் கொண்டா உள்ளது.பௌத்த காலாகாலமாக புராணகால வரலாற்றுக் காலம் முதல் கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் இருந்தே கீரிமலை சிவன் ஆலயமானது அமைந்திருந்தமைக்கான சான்றுகள் வரலாறுகள் உண்டு. அதன் அருகே பாதாளகங்கை எனப்படும் நன்நீர் கிணற்றுடன் கூடியதாக இருந்தது இதன் அருகே சித்தர்களின் தியான மடமும் இருந்தன. அருகே சடையம்மாவின் சமாதியுடன் சடையம்மா மடம் என்பனவும் இருந்தன.இதேபோன்று அப்பகுதியிலே நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குருவின் சமாதி என்பன அங்கே மிக நீண்டகாலமாக இருந்தது.அதேபோன்றே இங்கு பழமையான கதிரை ஆண்டவர் முருகன் ஆலயமும் இருந்தது. இவ்வாறான ஆன்மீக அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மேல்தான் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது  இது தொடர்பில் மிக நீண்ட காலமாகவே மறைக்கப்பட்டவை தற்போதுதான் வெளியே வெளிவந்துள்ளது. இவற்றை அழித்த செயலை ஒருபோதும் எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். இந்த ஆடம்பர மாளிகை யாருக்கு தேவை. மீண்டும் இருந்த இடத்தில் சிவாலயம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும். புனைகதைகளோடு வரலாறு கொண்ட நீங்களே இவ்வாறு நடந்து கொள்ளும் போது வாழ்ந்த வரலாறு உடைய நாம் எதற்கு அஞ்ச வேண்டும் எனவே அரசியல் வாதிகள் இதில் தலையிடாமை பெரும் வருத்தமழிக்கிறது. அரசாங்கத்திற்கு இந்த தீவில் நிரந்தரமான அமைதி நிலவ வேண்டுமேயானால் இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாகவே வேண்டும் இவை தொடர்ந்தால் இன்னும் வன்மங்களும் எதிர்ப்புகளுமே தொடரும் அது பாரிய அழிவிற்கே வழிவகுக்கும். எனவே ஆண்டவன் தீர்ப்பு என்று ஒன்று வரும் அப்போது அனைத்தும் கைமீறிப்போய்நிக்கும் எனவே பழைய நிலமைகள் ஏற்படுத்தப்பட்டே ஆக வேண்டும். மீண்டும் சிவாலயமும் சமாதிகளும் எழுப்பப்படவே வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement