• Jan 11 2025

வவுனியாவில் உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்- விவசாயிகள் கவலை..!

Sharmi / Jan 8th 2025, 9:30 am
image

வவுனியாவில் பிரதான பயிர்ச்செய்கைகளில் ஒன்றாக உளுந்துச்செய்கை காணப்படுகின்ற போதிலும் இம்முறை மஞ்சள் நோய் தாக்கத்தினால் விளைச்சல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல ஏக்க நிலப்பரப்பில் விழுந்துச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பின்னரான கால பகுதியில் ஏற்பட்ட மஞ்சள் நோய் தாக்கத்தினால் உளுந்து செய்கையில் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் அதனை கட்டுப்படுத்த ஏதுவான முறைகள் இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

உளுந்துக்கு விலை நிர்ணயம் இல்லாமையாலும் தாம் செலவு செய்யும் பணத்தை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படும் நிலையில்,  இவ்வாறு நோய் தாக்கங்களும் தொடர்ந்து வருவதனால் நாம் எதிர்வரும் காலங்களில் உளுந்துச் செய்கையை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5650 கெக்டெயரில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளதாகவும் மஞ்சள் நோய் தாக்கம் பயிர்களில் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி மாலினி முரளி தெரிவித்தார்.




வவுனியாவில் உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்- விவசாயிகள் கவலை. வவுனியாவில் பிரதான பயிர்ச்செய்கைகளில் ஒன்றாக உளுந்துச்செய்கை காணப்படுகின்ற போதிலும் இம்முறை மஞ்சள் நோய் தாக்கத்தினால் விளைச்சல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.பல ஏக்க நிலப்பரப்பில் விழுந்துச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பின்னரான கால பகுதியில் ஏற்பட்ட மஞ்சள் நோய் தாக்கத்தினால் உளுந்து செய்கையில் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் அதனை கட்டுப்படுத்த ஏதுவான முறைகள் இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.உளுந்துக்கு விலை நிர்ணயம் இல்லாமையாலும் தாம் செலவு செய்யும் பணத்தை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படும் நிலையில்,  இவ்வாறு நோய் தாக்கங்களும் தொடர்ந்து வருவதனால் நாம் எதிர்வரும் காலங்களில் உளுந்துச் செய்கையை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5650 கெக்டெயரில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளதாகவும் மஞ்சள் நோய் தாக்கம் பயிர்களில் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி மாலினி முரளி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement