முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க திருப்திகரமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க அரசு தரப்பு தவறியதால் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதாக நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்படி, சந்தேகநபரை தலா 500 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தது.
சந்தேகநபர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ச பிணையில் விடுதலை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க திருப்திகரமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க அரசு தரப்பு தவறியதால் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதாக நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.இதன்படி, சந்தேகநபரை தலா 500 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தது.சந்தேகநபர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.