• Oct 06 2024

இரண்டு உலக சாதனைகளை படைத்த கனேடிய இளம் வீராங்கனை! samugammedia

Chithra / Apr 3rd 2023, 6:20 pm
image

Advertisement

கனடாவின் 16 வயதான இளம் நீச்சல் வீராங்கனை இரண்டு உலக சாதனைகளை படைத்துள்ளார்.

சம்மர் மெக்கின்டோஸ் என்ற வீராங்கனை இவ்வாறு இரண்டு உலக சாதனை படைத்துள்ளார்.


உலக ஜூனியர் மற்றும் கனேடிய தேசிய நீச்சல் சாதனைகளை மெக்கின்டோஸ் படைத்துள்ளார்.

200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் மெக்கின்டோஸ் ஜூனியர் உலக சாதனையை படைத்துள்ளார்.


200 மீற்றர் தூரத்தை 1.53.91 என்னும் நேரப் பெறுதியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் 400 மீற்றர் மெட்லே நீச்சல் போட்டியிலும் ஜூனியர் உலக சாதனையை மெக்கின்டோஸ் நிலைநாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரே வாரத்தில் இரண்டு உலக சாதனைகளை நிலைநாட்ட முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாக மெக்கின்டோஸ் தெரிவித்துள்ளார். 

கனடாவில் நடைபெற்ற தகுதிகாண் மற்றும் பயிற்சிப் போட்டிகளின் போது இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இரண்டு உலக சாதனைகளை படைத்த கனேடிய இளம் வீராங்கனை samugammedia கனடாவின் 16 வயதான இளம் நீச்சல் வீராங்கனை இரண்டு உலக சாதனைகளை படைத்துள்ளார்.சம்மர் மெக்கின்டோஸ் என்ற வீராங்கனை இவ்வாறு இரண்டு உலக சாதனை படைத்துள்ளார்.உலக ஜூனியர் மற்றும் கனேடிய தேசிய நீச்சல் சாதனைகளை மெக்கின்டோஸ் படைத்துள்ளார்.200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் மெக்கின்டோஸ் ஜூனியர் உலக சாதனையை படைத்துள்ளார்.200 மீற்றர் தூரத்தை 1.53.91 என்னும் நேரப் பெறுதியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.சில தினங்களுக்கு முன்னர் 400 மீற்றர் மெட்லே நீச்சல் போட்டியிலும் ஜூனியர் உலக சாதனையை மெக்கின்டோஸ் நிலைநாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரே வாரத்தில் இரண்டு உலக சாதனைகளை நிலைநாட்ட முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாக மெக்கின்டோஸ் தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற தகுதிகாண் மற்றும் பயிற்சிப் போட்டிகளின் போது இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement