இளைஞர் ஒருவர் தனது பெண் தோழியுடன் வித்தியாசமான முறையில் உடலுறவில் ஈடுபட முயற்சி செய்தமையால் அவரது ஆணுறுப்பு முறிவடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த 37 வயதான இளைஞருக்கே இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் தனது தோழியுடன் வித்தியாசமான முறையில் உறவுகொள்ள ஆசைப்பட்டு ரிவர்ஸ் கௌகேர்ள் (Reverse cowgirl) எனும் நிலையில் உடலுறவு மேற்கொண்டுள்ளார்.
அதன் பொழுது, ஆண் உறுப்பில் வளைவு ஏற்பட்ட நிலையில் திடீரென்று பயங்கர வலியை உணர்ந்ததுடன் விரைப்பு தன்மையை இழந்துள்ளார்.
அத்துடன் ஆணுறுப்பிலிருந்து ரத்தம் கசிவு ஏற்பட்டதுடன் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமபட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளதுடன் தொடர்ந்து இளைஞருக்கு சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
தொடர்ந்து 3 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய அந்த இளைஞர் தற்போது சிறுநீர் கழிப்பதிலோ அல்லது விரைப்பு தன்மை ஏற்படுவதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள், ஆணுறுப்பில் எலும்புகள் இல்லா விடிலும் உடலில் இணைந்துள்ள அந்தரங்க எலும்பு பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போது ஆணுறுப்பில் உள்ள சிறிய ஃபாலிக் எலும்புகளுக்கும் முறிவு ஏற்படுகின்றது.
இதனால் உறுப்பில் வளைவு ஏற்பட்டு அதிலுள்ள இரத்த நாளச் சுவர்களில் காயங்கள் ஏற்படுவதுடன் திசுக்களும் பலமாக சேதமடைகின்றது. அத்துடன் இவ்வாறான ஆபத்தான உறவு நிலைகளில் மட்டுமே ஏற்படுகின்றன இவை ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.