• Oct 18 2025

விடுதியின் அறையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!

shanuja / Oct 16th 2025, 9:57 am
image


விடுதியொன்றின் அறையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றில் அறையிலிருந்தே  இளைஞரின் சடலம் நேற்று (15)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச்  சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


திவுலபிட்டி பொலிஸாருக்கு நேற்று  (15) கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவம் குறித்து திவுலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதியின் அறையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு பொலிஸார் தீவிர விசாரணை விடுதியொன்றின் அறையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றில் அறையிலிருந்தே  இளைஞரின் சடலம் நேற்று (15)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச்  சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.திவுலபிட்டி பொலிஸாருக்கு நேற்று  (15) கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவம் குறித்து திவுலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement