• Nov 22 2024

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - அதிகரிக்கும் அந்நிய செலாவணி

Tharun / Jun 15th 2024, 4:56 pm
image

மே மாதம் 112,128 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த தரவுகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை  வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் ஐரோப்பாவிலிருந்து 10.3% சுற்றுலாப் பயணிகளும், 6.9% அமெரிக்கப் பிராந்தியத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 896,799 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆக பதிவாகியுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - அதிகரிக்கும் அந்நிய செலாவணி மே மாதம் 112,128 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.கடந்த மாதம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.குறித்த தரவுகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை  வெளியிட்டுள்ளது.மே மாதத்தில் ஐரோப்பாவிலிருந்து 10.3% சுற்றுலாப் பயணிகளும், 6.9% அமெரிக்கப் பிராந்தியத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த வருடம் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 896,799 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆக பதிவாகியுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement