• Apr 08 2025

நெடுநாள் மீன்பிடி படகில் பெருந்தொகை போதைப் பொருளுடன் 07 பேர் கைது

Thansita / Apr 6th 2025, 9:20 pm
image

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

நெடுநாள் மீன்பிடி கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருளானது கண்டுபிடிக்கப்பட்டது

தொடர்ந்து போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

கடற்படைத் தளபதியினால் 2025 ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் போதைப்பொருட்கள் அவதானிக்கப்பட்டதுடன்,  இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பங்களித்த அனைத்து கடற்படை வீரர்களையும் கடற்படைத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார்.

கௌரவமான வாழ்கை - பாதுகாப்பான நாடு என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில்,

 கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் மற்றும் கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் நாட்டின் சட்ட அமுலாக்க முகவர்களால் வழக்கமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் ஊடாடலினால், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோதமான எந்தவொரு பொருளையும் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இடமில்லை என வலியுறுத்தினார். 

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கு இலங்கை கடற்படை தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த கடற்படைத் தளபதி,  மீன்பிடி என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், கடத்தல் செய்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

நெடுநாள் மீன்பிடி படகில் பெருந்தொகை போதைப் பொருளுடன் 07 பேர் கைது இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்நெடுநாள் மீன்பிடி கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருளானது கண்டுபிடிக்கப்பட்டதுதொடர்ந்து போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.கடற்படைத் தளபதியினால் 2025 ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் போதைப்பொருட்கள் அவதானிக்கப்பட்டதுடன்,  இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பங்களித்த அனைத்து கடற்படை வீரர்களையும் கடற்படைத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார்.கௌரவமான வாழ்கை - பாதுகாப்பான நாடு என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் மற்றும் கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் நாட்டின் சட்ட அமுலாக்க முகவர்களால் வழக்கமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.அங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் ஊடாடலினால், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோதமான எந்தவொரு பொருளையும் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இடமில்லை என வலியுறுத்தினார். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கு இலங்கை கடற்படை தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த கடற்படைத் தளபதி,  மீன்பிடி என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், கடத்தல் செய்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement