• Nov 06 2024

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு - 10 பேர் காயம்!!Samugammedia

Tamil nila / Dec 24th 2023, 3:04 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற வாகனம் விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை போலீசார் தெரிவித்தனர்.

ஹம்பக  பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வாகனம் இன்று அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா  சந்திக்கு  அருகில் வீதியை விட்டு விலகி பேருந்துக்காக காத்திருந்த ஒருவரை மோதி தள்ளியது.



கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக பேருந்துக்காக பேருந்து தறிப்படத்தில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கல்லாசிய கொடவ பகுதியைச் சேர்ந்த டி. ஏ சந்துன் தினேஷ் ஜெயக்கொடி என்ற 38 வயது உடையவர் என்பது தெரியவந்துள்ளது.



அத்துடன் விபத்தின் போது வாகனத்தில் பத்து பேர் பயணித்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 10 பேர் அனுராதபுரம் போதன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு - 10 பேர் காயம்Samugammedia யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற வாகனம் விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை போலீசார் தெரிவித்தனர்.ஹம்பக  பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வாகனம் இன்று அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா  சந்திக்கு  அருகில் வீதியை விட்டு விலகி பேருந்துக்காக காத்திருந்த ஒருவரை மோதி தள்ளியது.கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக பேருந்துக்காக பேருந்து தறிப்படத்தில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கல்லாசிய கொடவ பகுதியைச் சேர்ந்த டி. ஏ சந்துன் தினேஷ் ஜெயக்கொடி என்ற 38 வயது உடையவர் என்பது தெரியவந்துள்ளது.அத்துடன் விபத்தின் போது வாகனத்தில் பத்து பேர் பயணித்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 10 பேர் அனுராதபுரம் போதன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement