• May 19 2024

தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா! – தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Dec 22nd 2022, 2:23 pm
image

Advertisement

2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் 10 பில்லியன் ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலை நடத்துவதற்காக மொத்தமாக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா – தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் 10 பில்லியன் ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலை நடத்துவதற்காக மொத்தமாக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement