• Sep 17 2024

இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு காணப்படும் நோய்! மருத்துவரின் அதிர்ச்சி அறிக்கை SamugamMedia

Chithra / Mar 9th 2023, 8:08 am
image

Advertisement

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் டொக்டர் சஞ்சய ஹெய்யன்துடுவ இதனை தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் ஆகியன காரணமாக மேல் மாகாணத்தில் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வடமத்திய, வடமேல், ஊவா ஆகிய மாகாணங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளினால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு காணப்படும் நோய் மருத்துவரின் அதிர்ச்சி அறிக்கை SamugamMedia இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் டொக்டர் சஞ்சய ஹெய்யன்துடுவ இதனை தெரிவித்துள்ளார்.அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் ஆகியன காரணமாக மேல் மாகாணத்தில் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வடமத்திய, வடமேல், ஊவா ஆகிய மாகாணங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என தெரிவித்துள்ளார்.இந்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளினால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement