• Apr 27 2024

அரசு ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் குறைப்பு!

Sharmi / Jan 30th 2023, 10:57 am
image

Advertisement

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் குறைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் அண்மையில் உருவாக்கப்பட்ட தேசிய சிக்கனக் குழுவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் நாளை (01) பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. அமைச்சுகளின் செலவுகளை 15 சதவீதம் குறைக்கவும், மத்திய அரசின் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையைப் போன்று கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மீண்டுமொரு கடன் நிவாரணத்தை எதிர்பார்க்கிறது. நிதி நிதியின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த செலவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. பாகிஸ்தானின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மட்டுமே போதுமானது. முதல் கட்டமாக பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் கடனாக வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தேவையான நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரை கடன் மறுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் குறைப்பு பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் குறைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பாகிஸ்தான் அரசாங்கத்தினால் அண்மையில் உருவாக்கப்பட்ட தேசிய சிக்கனக் குழுவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் நாளை (01) பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. அமைச்சுகளின் செலவுகளை 15 சதவீதம் குறைக்கவும், மத்திய அரசின் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கையைப் போன்று கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மீண்டுமொரு கடன் நிவாரணத்தை எதிர்பார்க்கிறது. நிதி நிதியின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த செலவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. பாகிஸ்தானின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மட்டுமே போதுமானது. முதல் கட்டமாக பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் கடனாக வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தேவையான நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரை கடன் மறுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement