கொழும்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை இருந்து வெள்ளவத்தை வரை, கரையோர வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பந்தயத்திற்காக பயன்படுத்தட்டதாக கூறப்படும் 10 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் மொரட்டுவை, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான 10 பேரையும் இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 10 இளைஞர்கள் - கொழும்பில் கைது கொழும்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை இருந்து வெள்ளவத்தை வரை, கரையோர வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பந்தயத்திற்காக பயன்படுத்தட்டதாக கூறப்படும் 10 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் மொரட்டுவை, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான 10 பேரையும் இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.