• May 03 2024

இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் 101கிராமங்கள்...! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Aug 21st 2023, 3:15 pm
image

Advertisement

நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தெரிவிக்கின்றது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 338 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

 
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மாத்தளை, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய கிராமங்களில் வீடு நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2400 ஆகும். எஞ்சியுள்ள கிராமங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் 101கிராமங்கள். வெளியான அறிவிப்பு.samugammedia நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தெரிவிக்கின்றது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 338 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மாத்தளை, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய கிராமங்களில் வீடு நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2400 ஆகும். எஞ்சியுள்ள கிராமங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement