• Feb 07 2025

தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை! நால்வருக்கு விளக்கமறியல்

Chithra / Feb 7th 2025, 4:25 pm
image


இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நான்கு மீனவர்களையும்  விளக்கமறியலில் வைக்க  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் (24) ஆம் திகதி 24.12.2024 செவ்வாய்க்கிழமை  அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மன்னார்   நீதவான் குறித்த மீனவர்களை  விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்

கடந்த 24.12.2024 அன்று   கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்க பட்டிருந்தனர்.

கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 மீனவர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து விசாரனைகள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்றைய தினம்(7) மீண்டும்  வழக்கு விசாரணைகளுக்கு  அழைத்து வரப்பட்டனர்.

விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களுக்கு கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 13ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு மீனவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக  இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது .

ஏனைய  13 பேருக்கும் தளா 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய   இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.


தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை நால்வருக்கு விளக்கமறியல் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நான்கு மீனவர்களையும்  விளக்கமறியலில் வைக்க  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் (24) ஆம் திகதி 24.12.2024 செவ்வாய்க்கிழமை  அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.குறித்த மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மன்னார்   நீதவான் குறித்த மீனவர்களை  விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்கடந்த 24.12.2024 அன்று   கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்க பட்டிருந்தனர்.கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 மீனவர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டிருந்தார்.தொடர்ந்து விசாரனைகள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்றைய தினம்(7) மீண்டும்  வழக்கு விசாரணைகளுக்கு  அழைத்து வரப்பட்டனர்.விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களுக்கு கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 13ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு மீனவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக  இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது .ஏனைய  13 பேருக்கும் தளா 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய   இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Advertisement

Advertisement

Advertisement