• Sep 17 2024

ஹோட்டலில், இரவு உணவு உண்ட 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Tamil nila / Dec 22nd 2022, 10:14 pm
image

Advertisement

மத்துகமவில், உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கல்விச் சுற்றுலாவிற்குச் சென்ற மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை  இரவு வரக்காபொலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு உட்கொண்டுள்ளனர். ஹோட்டலில் இரவு உணவு உட்கொண்ட பின்னரே மாணவர்கள் திடீர் சுகயீனத்திற்கு உள்ளாகியுள்ளதாக மத்துகம பொலிஸhர் தெரிவித்தனர்.



குறித்த கல்விச் சுற்றுலாவில் தரம் 1-9 இல் கல்வி பயிலும் 240 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் கண்டியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த்  நிலைமையை எதிர்கொண்டனர்.


இரவு உணவுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட மாணவர்களுக்கு இரவு உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் பெரும்பாலான மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


அதேசமயம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி மாணவி நேற்று மாலை மத்துகமவிற்கு சென்றுள்ளடிநிலையில், மாணவர்களுக்காக ஹோட்டல் வழங்கிய பிரைட் ரைஸ் மாதிரிகள் முழு அறிக்கைக்காக அரசாங்க ஆய்வாளருக்கு பரிந்துரைக்கப்படும் என மத்துகம பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் உள்ள பொதுச் சுகாதார அதிகாரிகளும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலில், இரவு உணவு உண்ட 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி மத்துகமவில், உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கல்விச் சுற்றுலாவிற்குச் சென்ற மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை  இரவு வரக்காபொலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு உட்கொண்டுள்ளனர். ஹோட்டலில் இரவு உணவு உட்கொண்ட பின்னரே மாணவர்கள் திடீர் சுகயீனத்திற்கு உள்ளாகியுள்ளதாக மத்துகம பொலிஸhர் தெரிவித்தனர்.குறித்த கல்விச் சுற்றுலாவில் தரம் 1-9 இல் கல்வி பயிலும் 240 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் கண்டியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த்  நிலைமையை எதிர்கொண்டனர்.இரவு உணவுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட மாணவர்களுக்கு இரவு உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் பெரும்பாலான மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.அதேசமயம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி மாணவி நேற்று மாலை மத்துகமவிற்கு சென்றுள்ளடிநிலையில், மாணவர்களுக்காக ஹோட்டல் வழங்கிய பிரைட் ரைஸ் மாதிரிகள் முழு அறிக்கைக்காக அரசாங்க ஆய்வாளருக்கு பரிந்துரைக்கப்படும் என மத்துகம பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் உள்ள பொதுச் சுகாதார அதிகாரிகளும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement