• Feb 03 2025

யாழ் மாவட்டத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள்! அரச அதிபர் சுட்டிக்காட்டு

Chithra / Feb 2nd 2025, 11:26 am
image


யாழ் மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய அரச நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யார் மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்காவிடம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதியிடம் அவர்  இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் உற்பட அதன் கீழ் இயங்கும் 15 பிரதேச செயலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு குறைவாக பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது.

06 நிர்வாக கிராம உத்தியோகத்தர், 65 கிராம உத்தியோத்தர்கள், 27 முகாமைத்துவ உதவியாளர்கள், 45 அலுவலக உதவியாளர்கள், 12 சாரதிகள் மற்றும் மாவட்ட பதிவாளர் தின களத்தில் 08 பேர் உள்ளடங்களாக 162 ஆளணியினர் தேவைப்பாடு இருப்பதாக கூறினார். 

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர, விரைவில் முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.


யாழ் மாவட்டத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் அரச அதிபர் சுட்டிக்காட்டு யாழ் மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய அரச நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யார் மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்காவிடம் தெரிவித்தார்.நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதியிடம் அவர்  இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் உற்பட அதன் கீழ் இயங்கும் 15 பிரதேச செயலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு குறைவாக பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது.06 நிர்வாக கிராம உத்தியோகத்தர், 65 கிராம உத்தியோத்தர்கள், 27 முகாமைத்துவ உதவியாளர்கள், 45 அலுவலக உதவியாளர்கள், 12 சாரதிகள் மற்றும் மாவட்ட பதிவாளர் தின களத்தில் 08 பேர் உள்ளடங்களாக 162 ஆளணியினர் தேவைப்பாடு இருப்பதாக கூறினார். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர, விரைவில் முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement