அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் பின்னர் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
இதில் 66,000 மெட்ரிக்தொன் சிவப்பு அரிசியும் 101,000 மெட்ரிக்தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவு முதல் நிறைவடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அரசாங்கம் முதலில் அனுமதியளித்தது. அதற்கு முன்னர் டிசம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் காலக்கெடுவை மீண்டும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி. அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் பின்னர் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.இதில் 66,000 மெட்ரிக்தொன் சிவப்பு அரிசியும் 101,000 மெட்ரிக்தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவு முதல் நிறைவடைந்துள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அரசாங்கம் முதலில் அனுமதியளித்தது. அதற்கு முன்னர் டிசம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் காலக்கெடுவை மீண்டும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.