• Nov 24 2024

2004 சுனாமி - இன்னமும் அடையாளம் காணப்படாத 137 பேரின் உடற்பாகங்கள்...!

Chithra / Dec 28th 2023, 3:27 pm
image

 

2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்த 137 பேரின் அடையாளம் காணப்படாத உடற்பாகங்கள் காலி கராப்பிட்டிய  மருத்துவபீடத்தில் இன்னமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

137 பேர் யார் என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என சட்ட மருத்துவ அதிகாரி பேராசிரியர் யுசிபி பெரேரா தெரிவித்துள்ளார்.

இவர்களின் எலும்பு பாகங்களை ஆராய்ச்சிக்கும் கற்கைகளிற்கும் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று ஒன்பது மாதங்களின் பின்னர் தெல்வட்டபெரலிய சதுப்புநிலங்களில் இந்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் அடையாளம் காண்பதற்கான வாய்ப்பை வழங்கினோம் ஆனால் எவரும் அடையாளம் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2004 சுனாமி - இன்னமும் அடையாளம் காணப்படாத 137 பேரின் உடற்பாகங்கள்.  2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்த 137 பேரின் அடையாளம் காணப்படாத உடற்பாகங்கள் காலி கராப்பிட்டிய  மருத்துவபீடத்தில் இன்னமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.137 பேர் யார் என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என சட்ட மருத்துவ அதிகாரி பேராசிரியர் யுசிபி பெரேரா தெரிவித்துள்ளார்.இவர்களின் எலும்பு பாகங்களை ஆராய்ச்சிக்கும் கற்கைகளிற்கும் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சுனாமி அனர்த்தம் இடம்பெற்று ஒன்பது மாதங்களின் பின்னர் தெல்வட்டபெரலிய சதுப்புநிலங்களில் இந்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.உறவினர்கள் அடையாளம் காண்பதற்கான வாய்ப்பை வழங்கினோம் ஆனால் எவரும் அடையாளம் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement