• May 03 2024

220 இலட்சம் மக்களும் இன்று ராஜபக்சாக்களின் அடிமைகளாக மாறி நிர்க்கதியில் - சஜித் காட்டம்!

Tamil nila / Feb 8th 2023, 5:08 pm
image

Advertisement

அரசாங்கம் மக்கள் மீது தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்ற அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடனே நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரையை புறக்கணித்ததாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


மக்கள் வாழ்வை அழிக்கும் அக்கிராசன உரைகளுக்கு ஏமாறாமல் மக்களின் வாழ்வை அழிக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக விரைவில் மக்கள் அலையுடன் கொழும்பு வரவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், வரிக்கு மேல் வரி விதிக்க வேண்டாம் எனவும், 

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாமெனவுமே யானை மொட்டு அரசாங்கத்திடம் கூறிக்கொள்வதாகவும், இந்த யானை மொட்டு அரசாங்கத்தை விரட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.


இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும்

ராஜபக்சவின் அடிமைகளாக மாறிய 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர்.

 

நாட்டின் அவதானத்தைத் திசை திருப்பி மார்ச் 9 தேர்தலை நடத்தாதிருக்க முயற்சிக்கின்றனர்

என்பதனால், அக்கிராசன உரையையோ, நாடாளுமன்ற விவாதங்களையோ பற்றி சிந்திக்காமல் 

ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் வாக்குரிமைக்காக முன்நின்று மார்ச் 9 ஆம் திகதிக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

220 இலட்சம் மக்களும் இன்று ராஜபக்சாக்களின் அடிமைகளாக மாறி நிர்க்கதியில் - சஜித் காட்டம் அரசாங்கம் மக்கள் மீது தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்ற அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடனே நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரையை புறக்கணித்ததாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.மக்கள் வாழ்வை அழிக்கும் அக்கிராசன உரைகளுக்கு ஏமாறாமல் மக்களின் வாழ்வை அழிக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக விரைவில் மக்கள் அலையுடன் கொழும்பு வரவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், வரிக்கு மேல் வரி விதிக்க வேண்டாம் எனவும், மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாமெனவுமே யானை மொட்டு அரசாங்கத்திடம் கூறிக்கொள்வதாகவும், இந்த யானை மொட்டு அரசாங்கத்தை விரட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும்ராஜபக்சவின் அடிமைகளாக மாறிய 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். நாட்டின் அவதானத்தைத் திசை திருப்பி மார்ச் 9 தேர்தலை நடத்தாதிருக்க முயற்சிக்கின்றனர்என்பதனால், அக்கிராசன உரையையோ, நாடாளுமன்ற விவாதங்களையோ பற்றி சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் வாக்குரிமைக்காக முன்நின்று மார்ச் 9 ஆம் திகதிக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement