• May 03 2024

நாட்டில் 25 வீதமானோருக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு! அதிர்ச்சித் தகவலை கூறிய விசேட வைத்திய நிபுணர் samugammedia

Chithra / Apr 29th 2023, 5:09 pm
image

Advertisement

நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விற்றமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


விற்றமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

சூரிய ஒளியின் மூலமே மனித உடலுக்கு அவசியமான விற்றமின் D ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் இருந்து அதிக அளவில் விற்றமின் D ஊட்டச்சத்தினை பெற்றுக்கொள்ள முடியும். 

சாதாரணமாக நாளொன்றுக்கு 15 நிமிடங்களேனும் சூரிய ஒளி உடலுக்குக் கிடைப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 25 வீதமானோருக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு அதிர்ச்சித் தகவலை கூறிய விசேட வைத்திய நிபுணர் samugammedia நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விற்றமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.விற்றமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.சூரிய ஒளியின் மூலமே மனித உடலுக்கு அவசியமான விற்றமின் D ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் இருந்து அதிக அளவில் விற்றமின் D ஊட்டச்சத்தினை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரணமாக நாளொன்றுக்கு 15 நிமிடங்களேனும் சூரிய ஒளி உடலுக்குக் கிடைப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement