• Jan 11 2025

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்! கல்வி அமைச்சு

Chithra / Jan 7th 2025, 10:10 am
image

 நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆசிரியர்களால் இடமாற்றம் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை பல ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

அரச சேவையில் நிலவும் பாரிய சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25,000 கொடுப்பனவை வழங்குமாறு ஐக்கிய கல்வி சேவை சங்கம் மற்றும் ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன.

அத்தோடு, அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.


நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் கல்வி அமைச்சு  நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.அத்தோடு, ஆசிரியர்களால் இடமாற்றம் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதனால் புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை பல ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  அரச சேவையில் நிலவும் பாரிய சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25,000 கொடுப்பனவை வழங்குமாறு ஐக்கிய கல்வி சேவை சங்கம் மற்றும் ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன.அத்தோடு, அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement